Main Menu

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 19ஆம் திகதி கையளிக்கப்படும் – எதிர்க்கட்சி

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் 19ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்தப் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார்.

தவறினால் புதன் கிழமை பிரேரணையை கையளிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த நாடாளுமன்ற வாரத்தின் முதல் இரண்டு நாட்களுக்குள் அது கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்க அரசு இலஞ்சம் தருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு மில்லியன் டொலர்கள் வழங்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

பகிரவும்...