Main Menu

அயோத்தி தீர்ப்பு- மசூதி கட்டுவதற்கு மாற்று நிலம் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார். அப்போது,  பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. எனவே தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க  வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். 

பகிரவும்...