Main Menu

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்துவந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தியில் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் திகதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு, லக்னோ சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நாள்தோறும் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் வழக்கில் இதுவரை 351 சாட்சியங்கள், 600 பக்க ஆவணங்களை சி.பி.ஐ. தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

பகிரவும்...