Main Menu

அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையதே!முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என முன்னாள் வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் நீதி மன்றத்தால் டெனீஸ்வரன் தொடர்பில் வெளியான அந்த தீர்ப்பு பிழை. அதில் ஒரு விடயத்தை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் எடுக்காது விட்டு விட்டனர். நான் அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் போது அவருக்கு ஒரு விடயத்தை கடிதத்தில் எழுதியிருந்தேன். உங்களுக்கான உத்தியோகபூர்வமான கடிதம் வெகு விரைவில் கிடைக்கும் என தெரிவித்திருந்தேன். ஆளுனருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஆளுனர் அதனை அனுப்புவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளுனர் அதனை அனுப்பவில்லை. ஆகவே இதில் பிழை ஆளுனருடையது. 

மேலும், நாங்கள் எழுதிய அந்தக் கடிதத்தை வைத்து அவர்களை அழைத்து அவர்களிடம் சத்தியபிரமாணம் செய்ய வைத்து அவர்களுக்கான அமைச்சுக்களை வழங்குகின்றார். அதன்போது நாங்கள் கோரியதைத் தான் அவர் செய்கின்றார். அது தான் சட்டம்.

அதுபோல் நான் நீக்குவதாக கூறியவருக்கும் வர்த்தகமானி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவே அமைச்சு பதிவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்த பின்னரே மற்றவருக்கு சத்தியபிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் டெனீஸ்வரன் அவர்களை நீக்காது அவருக்கு பதிலாக நியமித்தவர்களுக்கு ஆளுனர் சத்தியபிரமாணம் செய்ய வைத்து அவர்களை அமைச்சர்களாக அறிவித்துள்ளார். 

இது தான் பிழை. இந்த விடயத்தை நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இதனையே பிழை என்கின்றேன். எனவே இது தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார். 

பகிரவும்...