Main Menu

அமெரிக்க பயிற்சி நெறியில் பங்கேற்க சிறிலங்கா இராஜதந்திரிக்கு தடை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும், சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அனைத்துலக வருகை தலைமைத்துவ திட்டத்தின் கீழ், ஒரு மாத காலம் நிபுணத்துவ பரிமாற்ற பயிற்சிகளுக்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் அமெரிக்கா செல்வதற்கு சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராஜதந்திரியாக இருக்கும் வரை அவரை இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், அனைத்துலக வருகை தலைமைத்துவ திட்டம் என்ற பெயரில், முதன்மை நிபுணத்துவ பரிமாற்ற பயிற்சித் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...