Main Menu

அமெரிக்க – இலங்கை நட்புறவு : அமெரிக்க பிரதிநிதி இலங்கை விஜயம்

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 3 ஆம் திகதிவரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக அவரது இந்த விஜயம் அமையவுள்ளது.

இதன்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்வார்.

பகிரவும்...