Main Menu

அமெரிக்கா- நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளமையினால் பேரழிவு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தினசரி பாதிப்பு விகிதம் 3.45 சதவீதமாக உள்ளதுடன் 28பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை வைத்தியசாலைகளில்  சராசரியாக ஒரு நாளில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

எனவேதான், கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க அந்த மாகாணத்தில் பேரழிவு அவசர நிலையை ஆளுநர் கேத்தி ஹோசுல் பிறப்பித்துள்ளார்.

இந்த மாகாணத்தில், புதிய வகை வைரஸான ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை. ஆனாலும் புதிய வைரஸ் உருவாகி நியூயார்க்கில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு, முன் எச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...