Main Menu

அதிக காலம் பதவியில் உள்ள உலகின் பெண் தலைவர்

உலகில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் தலைவர் யார்? என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிலீக்ஸ்உலக அளவில் பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேற்றமடைந்து வருகின்றனர். அதிலும், அரசியலில் அதிக அளவில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல் மூலமாக ஒரு நாட்டை ஆளும் வல்லமையை அடைந்துள்ளனர். 
இந்நிலையில், உலக அளவில் அதிக காலம் பதவியில் உள்ள பெண் தலைவர் குறித்த ஆய்வு ஒன்றை விக்கிலீக்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.  அதில் உலகின் அதிக காலம் அரசியல் பதவியில் உள்ள பெண் என்ற பெருமையை அவாமி லீக் கட்சியின் தலைவரும் வங்காளதேசத்தின் பிரதமருமான ஷேக் ஹசீனா பெற்றுள்ளார். 

இவர் 1996 முதல் 2001 வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 2008-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். 2008 முதல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஷேக் ஹசீனா (16 ஆண்டுகள்) அதிக காலம் பதவி வகித்து வரும் உலகின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை அடைந்துள்ளார். 
இதற்கு முன்னதாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி (15 ஆண்டுகள்), ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் (14 ஆண்டுகள்), இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரட் தாட்சர் (11 ஆண்டுகள்) ஆகியோர் அதிக காலம் பதவி வகித்த பெண் தலைவர்கள் என்ற பெருமையை பெற்றிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

பகிரவும்...