Main Menu

அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈரான் அரசு நம்பிக்கை… உயர்மட்ட பேச்சு வார்த்தையாளர் எச்சரிக்கை

2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க உலக வல்லரசுகளுடனான பேச்சுவார்த்தையில் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக ஈரானிய அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதாக எச்சரித்த நிலையில் ஈரானிய அரசாங்க பேச்சாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக இது இறுதி சுற்று பேச்சுவார்த்தை என்று பல பிரதிநிதிகள் நம்புகிறார்கள்… ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் அப்பாஸ் அராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமீபத்திய சுற்று பேச்சுக்கள் ஆக்கபூர்வமானவை மற்றும் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளதாவும், ஆனால் இன்னும் அதிகமான வேலைகள் செய்யப்பட வேண்டும் என ஈரானுக்கான அமெரிக்க விசேட தூதுவர் றொபேர்ட் மாலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி உடன்படிக்கைக்கு முழுமையாக திரும்ப தெஹ்ரானும் வொஷிங்டனும் பொருளாதாரத் தடைகள் மற்றும் அணுசக்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏப்ரல் முதல் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

இந்நிலையில் ஜூன் 18 ம் திகதி ஈரானின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிரவும்...