Main Menu

அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள் இருக்கும் – ஹர்ஷ்வர்தன்

அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள் இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக பொறுப்பேற்ற ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  “135 கோடி மக்கள் வாழும் நாட்டில்  1.1 இலட்சம் கொரோனா பாதிப்புகள் மட்டுமே உள்ளன. அதேபோல் இறப்பு விகிதமும் 3 சதவீதம் என்ற ரீதியில் தான் உள்ளது.

கொரோனாவை இந்தியா  ஒரு செயல்திறன்மிக்க  முன்கூட்டிய வழியில்  ஒப்பிட முடியாத அளவு உறுதியுடன் எதிர்கொண்டது. தற்போது இந்தியாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 40 சதவீதத்திற்கும் மேல் உள்ளது மற்றும் பாதிப்புகளின் இரட்டிப்பு விகிதம் 13 நாட்களாக உள்ளன.

இந்த தொற்று நோயால் உலகளாவிய நெருக்கடியின் போது நான் இந்த பொறுப்பேற்கிறேன் என்பதை அறிவேன். அதே நேரத்தில் அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள் இருக்கும் என்பதையும் நாம் அனைவரும் புரிந்து கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...