Main Menu

ஹிஸ்­புல்­லாஹ்வின் சுய­ந­லத்­துக்­காக முஸ்­லிம்கள் வாக்­கு­களைச் சித­ற­டிக்கக் கூடாது – ரவூப் ஹக்கீம்

ஹிஸ்­புல்லாஹ் பாரா­ளு­மன்றம் செல்­ல­வேண்டும் என்­ப­தற்­காக ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்கள் தங்­க­ளது வாக்­குளை வீண­டிக்­க­ மு­டி­யாது. சிறு­பான்மை மக்­க­ளுக்கு பாத­க­மான விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு காத்­தி­ருக்கும் சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­களின் கைகளில் ஆட்­சியை ஒப்­ப­டைத்தால் சமூ­கத்­துக்கு என்றும் விமோ­சனம் கிட்­டாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து காத்­தான்­கு­டியில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்,

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய மேலும் கூறி­ய­தா­வது;

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட அபாண்­ட­மான குற்­றச்­சாட்­டு­களை மறுத்து நான் அறிக்­கை­யொன்றை எழு­தி­யி­ருக்­கிறேன். அத்­துடன் வஹா­பிசம், அரபு மய­மாக்கல் போன்ற விட­யங்­க­ளிலும் எனது கருத்­து­களைக் குறிப்­பிட்­டி­ருக்­கிறேன். தெரி­வுக்­குழு அறிக்­கையில் அது உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்று, சபா­நா­ய­க­ருக்கு கடிதம் அனுப்­பி­யி­ருக்­கிறேன். அதை அறிக்­கையின் பின்­னி­ணைப்­பாக இணைக்­க­ வேண்டும்.

சிறு­பான்மை மக்கள் ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருப்­பதால், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்கு சிந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த நோக்­கத்தில் கள­மி­றங்­கி­யுள்ள மொட்டு அணி வேட்­பா­ளரின் வெற்­றி­வாய்ப்பை அதி­க­ரிப்­ப­தற்கு, முஸ்லிம் வாக்­கு­களை திசை­ தி­ருப்பும் நோக்கில் வேட்­பாளர் ஒருவர் காத்­தான்­கு­டியில் கள­மி­றங்­கி­யுள்ளார்.

நிறை­வேற்று அதி­காரம் இருப்­ப­தால்தான், சிறு­பான்­மை­யின அர­சியல் சக்­தியை பேரின சக்­திகள் உண­ரக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய பிர­த­மரும் ஜனா­தி­ப­தி­யாக வர­ மு­டி­யாது என்­ப­தற்­காக நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தற்கு ஒற்­று­மை­யாகச் செயற்­பட்­டார்கள். ஆனால், அவர்­க­ளது கனவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மண்ணை அள்­ளிப்­போட்­டது.

தாங்கள் ஆட்­சிக்கு வந்தால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்தி நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிக்கப் போவ­தாக முன்னாள் ஜனா­தி­பதி கூறு­கிறார். அத்­துடன் தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை­யையும் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாகக் கூறு­கின்றார். இதனால் சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டையும். அர­சாங்கம் எங்­களில் தங்­கி­யி­ருக்­க­ வேண்­டிய தேவை ஏற்­ப­டாது. இது சிறு­பான்மை சமூ­கத்­துக்கு பெரும் ஆபத்தை விளை­விக்கும்.

அவர்கள் வெற்­றி ­பெ­று­வ­தற்­கான நம்­பிக்கை இன்னும் வராத நிலையில், இப்­போது என்­னையும் பயங்­க­ர­வா­தி­க­ளையும் சேர்த்து முடிச்­சுப்­போடும் வேலையைச் செய்ய ஆரம்­பித்­துள்­ளனர். இதனால் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை அறவே பெற­

மு­டி­யாது என்று தெரிந்­தி­ருந்தும், கிரா­மப்­புற சிங்­கள மக்­களை உசுப்­பேற்றி வாக்­குளைக் கொள்­ளை­ய­டிக்கும் கனவில் மிதந்து ­கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்­க­ளது கனவு ஒரு­போதும் பலிக்­காது.

தனக்கு தேசி­யப்­பட்­டியல் கிடைத்­த­மைக்கு நன்­றிக்­க­ட­னாக எஜ­மா­னர்கள் எதைச் சொன்­னாலும் ஹிஸ்­புல்லாஹ் அதை செய்­து ­கொண்­டி­ருக்­கிறார். ஞான­சார தேரரை விடு­தலை செய்­யு­மாறு அவர் கோரிக்கை விடுத்தார். கடை­சியில் வெளியில் வந்த ஞான­சார தேரர், ஆளுநர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு ஹிஸ்­புல்­லா­ஹ்வுக்கு உத்­த­ர­விட்டார். எஜ­மா­னர்­க­ளுக்கு விசு­வாசம் காட்­டப்போய், கடை­சியில் அவ­ருக்கே அது ஆபத்­தாக வந்­து­ மு­டிந்­தது. கடந்த ஆட்சி கவிழ்ப்­பின்­போது என்­னு­டைய அமைச்சு அவ­ருக்கு வழங்­கப்­பட்­டது. அப்­போது மக்­கா­வி­லி­ருந்த என்­னிடம் அவர் வழ­மை­யான தரகர் வேலை­யைத்தான் செய்தார். எனக்குத் தரு­வ­தற்கே அவர் அமைச்சை தற்­கா­லி­க­மாக வைத்­தி­ருப்­ப­தா­கவும், உடனே வந்து அமைச்சைப் பொறுப்­பேற்று மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­மாறும் தகவல் அனுப்­பு­கிறார். உங்­க­ளைப் போல் சமூ­கத்தை காட்­டிக்­கொ­டுக்கும் வேலையை என்னால் செய்­ய­ மு­டி­யாது என்று அவ­ரிடம் உறு­தி­யாக சொல்­லி­ விட்டேன்.

தேசி­யப்­பட்­டியல் பெறு­வ­தற்­கா­கவும் தனது பல்­க­லைக்­க­ழ­கத்தைக் காப்­பாற்­று­வ­தற்­கா­கவும் அதே தரகர் வேலையை அவர் இப்­போதும் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கிறார். சமூகம் எக்­கேடு கெட்­டுப்­போ­னாலும் பர­வா­யில்லை, தனது சுய­ந­ல­னுக்­காக சமூ­கத்தின் வாக்­குகளைத் திசை­ தி­ருப்பும் கொந்­த­ராத்து வேலையை அவர் இப்­போது செய்­து­கொண்­டி­ருக்­கிறார். இப்­ப­டி­யா­ன­வர்­களின் சுய­லாப அர­சி­ய­லுக்கு மக்கள் சாவு­மணி அடிக்­க­ வேண்டும்.

இது பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்ல. அவர் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்­காக முஸ்­லிம்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­கு­களை வீண­டிக்­க­ மு­டி­யாது. இவரை பயங்­க­ர­வா­தத்­துக்கு துணை­போ­ன­வ­ராகக் காட்­டிய அதே கும்­பலை மீண்டும் ஆட்­சிக்குக் கொண்­டு ­வ­ரு­வ­தற்கு தற்­போது கொந்­த­ராத்து வேலை செய்­து­கொண்­டி­ருக்­கிறார். இச்சந்தர்ப்பத்தில் தங்களது உச்சபட்ச ஜனநாயக உரிமையைக் காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு காத்தான்குடி மக்களுக்கு இருக்கின்றது. இப்படியானவர்களை காப்பாற்றுவதற்காக எங்களது பதவிகளைத் தூக்கியெறிந்து பல தியாகங்களைச் செய்தோம். அதற்காக இப்போது எங்களுக்குக் கிடைத்திருக்கின்ற பரிசுதான் பயங்கரவாத முத்திரை. இதற்கான புகைப்படங்கள், காணொளிகள் எல்லாம் தாராளமாக தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்தச் செய்திகள் அவர்களது ஆங்கிலச் செய்திகளில் வருவதில்லை. சிங்களச் செய்திகளில் மாத்திரமே வருகின்றன. இதன்மூலமே அவர்களுடைய அரசியல் நிகழ்ச்சிநிரலை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

பகிரவும்...