வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் விசேட கோரிக்கை
வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கமைய இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடனான உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஒட்சிசன் தட்டுப்பாடும் நிலவுவதனால் நோயாளிகள் ஆபத்தான நிலைமைக்குள்ளாகியுள்ளனர். இவற்றை பெற்றுக்கொடுக்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். முடிந்த அளவு வேகமாக உதவிகளை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த விசேட வேண்டுகோளை விடுத்துள்ளார்.