வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்வதைத தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை சில இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றர். கொழும்பு சங்-ரில்-லா, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களிலும் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்தவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிவ தேவாலயத்தில் காயமடைந்தவர்களும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – சீயொன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.