Main Menu

விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் – தே.மு.தி.க

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தலைமைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்  நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம்.

வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது.  இருப்பினும் அவர் தற்போது பூரண நலமுடன் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares