வவுனியாவில் பல பகுதிகள் இராணுவத்தால் சுற்றிவளைப்பு!
வவுனியா சாலம்பைக்குளம், புதிய சாலம்பைக்குளம், பட்டாணிச்சூர் புளியங்குளம்,செட்டிகுளம் காட்டு மாங்குளம் , சூடுவெந்தபிளவு,அரபாத் நகர், மதீனாநகர் போன்ற பிரதேசங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் ஆயுதங்கள் பதுக்கியிருப்பதாகவும் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது
இதனடிப்படையில் இன்று அதிகாலை புதிய சாலம்பைக்குளம் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை சற்றுமுன் வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளம் பகுதியிலும் இராணுவ சுற்றிவளைப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
இதேபோல் ஏனைய பிரதேசங்களும் சுற்றிவளைக்கப்படும் எனவும் அறியப்படுகிறது