வவுனியாவில் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு!
வவுனியா பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், வவுனியா வைத்தியசாலை மற்றும் நகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்து.
வைத்தியசாலைக்குள் நுழைபவர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னரே உள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் நகரத்தில் நடமாடுபவர்களிடத்திலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.