வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக செல்வேந்திரா மீண்டும் தெரிவு
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக என். செல்வேந்திரா மீண்டும் நகர சபை தவிசாளராக ஏக மனதாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு கடந்த மாதம் தவிசாளரான என். செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய தினம் புதிய தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது.
அதன் போது மீண்டும் சுயேட்சை குழு சார்பில் என். செல்வேந்திரா போட்டியிட்ட நிலையில் மீண்டும் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.