Main Menu

வருங்கால மன்னருக்குச் சமையல் வல்லுநராக ஆசை

வருங்கால மன்னர் என்று கருதப்படும் பிரிட்டிஷ் இளவரசர் ஜார்ஜ் சமையல் வல்லுநராக வேண்டும் என்று விரும்புவதாக People இணையத்தளம் தெரிவித்தது.

அவர் தற்போதைய பிரிட்டிஷ் மன்னரான சார்ல்ஸின் பேரனும் இளவரசர் வில்லியமின் மூத்த மகனுமாவார்.

மன்னர் பதவியே இருந்தாலும் அவருக்கென ஓர் ஆசை இருக்கின்றது…

11 வயது ஜார்ஜ் சமையல் வல்லுநராக வேண்டும் என்று விரும்புவதாக People இணையத்தளம் தெரிவித்தது.

அதுவும் குறிப்பாக பீட்ஸா வல்லுநராக வேண்டும் என்பது அவரின் கனவாம்.

அண்மையில் அவர் தமது தாய் உட்பட மேலும் சிலருடன் ஓர் உணவகத்திற்குச் சென்றிருந்ததாக People தளம் குறிப்பிட்டது.

அப்போது ஜார்ஜ் பீட்ஸா வல்லுநராக வேண்டும் என்கிற தமது விருப்பத்தைத் தெரிவித்ததாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares