வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்
இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக இன்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் கௌரவ ஆளுநர் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.