Main Menu

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் – அஞ்சலி நிகழ்வுகள்

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் இன்றுடன் ஒரு மாதமாகின்றது.குறித்த குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய முன்றலில் இன்று காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இதன்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள்; மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர். சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை ஒன்றுகூடிய மக்கள் அங்குள்ள நீர்த்தடாகத்தில் மலர்களை தூவி, விளக்கேற்றி இறந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

வடக்கிலுள்ள வணக்க ஸ்தலங்களில் காலை 8.45 மணியளவில் ஆலயங்களின் மணி ஒலி எழுப்பப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி, மௌன அஞ்சலியுடன் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சியில் அரச பேருந்து தரிப்பிடத்திலும்; உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம்பெற்றிருக்கும் அஞ்சலி நிகழ்வுகளில் சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 1
download
625.0.560.320.160.600.053.800.700.160.90 5
625.0.560.320.160.600.053.800.700.160.90 4
625.0.560.320.160.600.053.800.700.160.90 6
625.0.560.320.160.600.053.800.700.160.90 3
பகிரவும்...