வசாவிளானில் குண்டுவெடிப்பு – சிறிலங்கா இராணுவச் சிப்பாய் பலி, இருவர் படுகாயம்
பலாலி பெருந்தளப் பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு படையினர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.
காயமடைந்த படையினர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும்,மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.