லெபனானில் மீண்டும் வெடிப்பு சம்பவம்: நான்கு பேர் உயிரிழப்பு- 20பேர் காயம்!
லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு எரிபொருள் தாங்கி வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 20பேர் காயமடைந்தனர்.
இதுதவிர மேலும் பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தினால் தாரிக்-அல்-ஜ்தைட் மாவட்டத்தில் உள்ள கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தீ மற்றும் வெடிப்பு கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வருவதால், இது மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை தூண்டியுள்ளன.
இந்த வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.