லியோனில் மர்மபொதி வெடிப்பு : 13 பேர் காயம்!
சற்றுமுன்னர் லியோனில் இடம்பெற்ற பலத்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
Rue Victor Hugo வீதிக்கும் Rue Sala வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் 17:30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்து பொது ஒன்றை வைத்துச் சென்றுள்ளமையும், அந்த பொதியே வெடித்துச் சிதறியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை உட்பட பத்துபேர் இதில் காயமடைந்துள்ளனர்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கும் போது, இதை ‘ஒரு தாக்குதல்’ என அடையாளப்படுத்தியுள்ளார்.
அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதிய காரணமின்றி அப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும் உள்ளூர் காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதியினை விட்டுச் சென்ற மர்ம நபரினை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் தொலைபேசியூடாக தகவல்களை கேட்டறிந்துகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.