ரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு
பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தாமதிக்கப்பட்டு வருவதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் இன்றைய தினம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்த் தரப்பினால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஜூன் மாதம் 18,19 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்படுமென சபாயநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.