Main Menu

ரஷ்யா ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை – மக்ரோன்

உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் இரஷ்யா ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

மக்ரோன் தெரிவிக்கையில், உலகின் மற்ற பகுதிகளை எதிர்ப்பது மேற்கு உலகின் வேலை இல்லை. மாறாக போருக்கு எதிரான அமையினை உருவாக்குவதே எமது இலக்காகும் என தெரிவித்த மக்ரோன், உக்ரைனுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இரஷ்யா ஒருபோதும் வெற்றி பெறாது. வெற்றி பெறக்கூடாது. இவ்வருட இறுதிக்குள் இந்த யுத்தம் நிறைவுக்கு வரும் என தாம் தீர்க்கமாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக ஜெர்மனியின் தெற்கு பிராந்தியமான Bavaria நகரில் G7 உச்சி மாநாடு இடம்பெற்றிருந்தது. இன்று இந்த மாநாட்டின் முடிவிலேயே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனை குறிப்பிட்டார்.