Main Menu

மீண்டும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி?

பிரான்சில் கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, பொதுமக்கள் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் Elisabeth Borne தெரிவிக்கையில், நெருக்கமான இடங்களில் முகக்கவசம் அணிவதை அவர் பரிந்துரை செய்வதாக குறிப்பிட்டார். குறிப்பாக பொது போக்குவரத்துக்களில் முகக்கவசம் அணிந்து பயணிகள் பயணிக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார். அதேவேளை, முகக்கவசம் அணிவது ‘கட்டாயம்’ இல்லை என்றபோதும், “அது பொதுமக்களின் பொறுப்பாகும்!” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இரண்டாம் கட்ட பூஸ்ட்டர் தடுப்பூசி (நான்காவது தடுப்பூசி) போடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எளிதில் நோய்த்தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு இந்த இரண்டாவது பூஸ்ட்டர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இது தொடர்பான விபரங்கள் ஏற்புடையவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...