ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பதுளையில் ஆதரவு பேரணி
அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா அமைச்சர் ரிசாட் பதியூதின் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கக் கோரி பதுளை நகரில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
இப்பேரணியை பொதுபலசேனா அமைப்பும், சமூக அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்டன.
இப்பேரணிக்கு ஆதரவளிக்கும் வகையில் பதுளை மாநகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
இப்பேரணியில் எதிர்ப்பு பாதாதைகளை தாங்கிய வண்ணம் அரசை எதிர்க்கும் வகையில் கோசங்களை எழுப்பிய வண்ணம் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த பேரணிக்கு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.