Main Menu

மெட்ரோ சேவைகள் முற்றாக மூடப் படுகின்றன

வியாழக்கிழமை 5ம் திகதி, 11 அணி (Lignes) மெட்ரோ சேவைகள் முற்றாக மூடப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இலக்கமும் 14ம் இலக்கமும் மட்டும் சாரதியற்ற தானியங்கிச் சேவைகள் என்பதால், சனநெருக்கடியான வேலை நேரத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது ஏனைய அனைத்து மெட்ரோ அணிகளும் சேவைநிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அணிகள் 2, 3, 3Bis, 5, 7bis, 8, 10, 11, 12, 13 ஆகியவை முற்றகாக மூடப்பட உள்ளன. நாளை புதன்கிழமை 19h00 மணியிலிருந்து, தொடருந்துப் போக்கவரத்து நெருக்கடிகளும், சேவைகள் இரத்துச் செய்வதும் ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.