Main Menu

மாற்றமடைய உள்ள பிரான்சின் தேசிய அடையளா அட்டை?

பிரான்சின் தேசிய அடையாள அட்டையானது (CNI -carte nationale d’identité) பெரும் மாற்றத்திற்கு உள்ளாக உள்ளது.

 வெறும் கடதாசி வடிவத்திலிருந்த தேசிய அடையாள அட்டையானது, 1987ஆம் ஆண்டிலிருந்து, இன்றைய வடிவத்திலுள்ள பிளாஸ்டிக் அமைப்பிலான வடிவத்தைப் பெற்றதோடு அளவும் மாறியது. இதுவும் போலி அடையாள அட்டை மோசடியைத் தடுப்பதற்காகவே மாற்றப்பட்டது. 

 கிட்டத்தட்ட 30 வருடங்களின் பின்னர், பிரான்சின் தேசிய அடையாள அட்டையானது, தற்போதைய பிளாஸ்டிக்கிலான வாகனச் சாரதி அனுமதிப்பத்திரத்தின் (permis de conduire) அளவில் அமைக்கப்பட உள்ளது.  மீண்டும், போலி அடையாள அட்டைகளைத் தடுப்பதற்காகவும், ஏனைய பல ஐரோப்பியநாடுகளின் வடிவத்திற்கு மாற்றுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

  இது 2021 இலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது. 

பகிரவும்...