Main Menu

மெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, மெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைக்காட்சி உரையொன்றில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் இடம்பெறாத வர்த்தகங்கள் அனைத்தும் முடங்கியுள்ளதால், நாட்டில் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

என் கணிப்பை பொறுத்தவரை மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகள் முடங்கினாலும், புதிதாக இரண்டு மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், லத்தீன் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான மெக்ஸிக்கோ, கார் தயாரித்தல், சுரங்க மற்றும் கட்டுமானத்தில் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டது.

இதனிடையே, தொற்றுநோய்க்கு முன்னர் மெக்ஸிகன் பொருளாதாரம் ஏற்கனவே மந்தநிலையில் இருந்தது. சில முதலீட்டு வங்கிகள் இந்த ஆண்டு 9 சதவீதம் பெரிய பொருளாதார சுருக்கத்தை கணித்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில், நிதி அமைச்சகம் இந்த ஆண்டு பொருளாதாரம் 3.9 சதவீதம் சுருங்கக்கூடும் என கணித்திருந்தமை நினைவுக்கூரத்தக்கது.

பகிரவும்...