Day: May 26, 2020
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது: ஜப்பான் குழந்தை சங்கம்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, முகக்கவசம் அணிவதை ஒவ்வொரு நாடுகளும் கட்டாயப்படுத்தி வருகின்ற நிலையில், இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது என ஜப்பான் குழந்தை சங்கம் எச்சரித்துள்ளது. ஏனெனில் அவர்களுக்கு முகக்கவசம் அணிவது சுவாசத்தை கடினமாக்கலாம் மற்றும்மேலும் படிக்க...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம் ஆனார்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணமானார். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார். ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பெசும் சக்தியை வளர்த்து வந்த ஆறுமுகன் தொண்டமான, தற்போதைய அரசாங்கத்தின்மேலும் படிக்க...
மெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம்!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, மெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைக்காட்சி உரையொன்றில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்மேலும் படிக்க...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் ஸ்பெயின்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய அழிவினை சந்தித்துள்ள ஸ்பெயின், சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும் ஒரு கட்டமாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றது. இதற்கமைய, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ஸ்பெயினில் விடுமுறைகளுக்கான முன்பதிவினைமேலும் படிக்க...
எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரான்ஸ் தீர்மானம்!
பிரான்ஸில், எல்லையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க வருவோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறையத்மேலும் படிக்க...
தமிழகத்தில் 88 வீதமானோருக்கு அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்று – விஜயபாஸ்கர்
தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலைமைமேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6 – 20 இலட்சம் வரையில் அதிகரிக்கும் என எச்சரிக்கை
இந்தியாவில் ஜூலை மாதத் தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 6 இலட்சத்திலிருந்து அதிகளவாக 20 இலட்சம் வரையிலும் இருக்கும் என மிச்சிகன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவிவரும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அளவில்மேலும் படிக்க...
2 மாதங்களின் பின்னர் யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நீர்கொழும்பு, அக்கரைப்பற்று, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு இன்றைய தினம் தனியார்மேலும் படிக்க...
பிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் – சரத் பொன்சேகா
வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால், அவர் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கருணா போன்றவர்கள்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு
நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது.மேலும் படிக்க...