முஸ்லிம் மக்களுக்கு எதிராக காணப்பட்ட நெருக்கடிகள் காரணமாகவே அமைச்சு பதவிகளை துறந்தோம்: எம். எச்.ஏ.ஹலீம்
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவரவே அமைச்சுப்பதவிகளை துறந்தோம்.அத்துடன் எமது ராஜினாமா தொடர்பாக மகாநாயக்க தேரர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து தெளிவுபடுத்துவோம் என முன்னாள் அமைச்சர் எம். எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாம் எமது மக்களுக்காகவே அமைச்சுப்பதவிகளை துறந்தோமே தவிர றிசாட் பதியுதீனுக்காக பதவி துறக்கவில்லை.பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் சில ஊடகங்கள் மேற்கொண்ட பொய் பிரசாரம் காரணமாக முஸ்லிம் மக்கள் மீது பல்வேறு நெருக்குவாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.முஸ்லிம் மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தன.அதனால் எமக்கெதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவே நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்தோம் என அவர் தெரிவித்தார்.
பகிரவும்...