Main Menu

தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது தொடர்பில் ஜனாதிபதி மறு பரீசலனை செய்ய வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத் தடைவிதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத் தடைவிதிக்கும் யோசனையை ஜனாதிபதி அமுல் படுத்தினால்  சவப்பெட்டியைக் கூட வாங்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்தார். 

பாராளுமன்ற குழு அறையில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத் தடைவிதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துவிடுவதுடன், சவப்பெட்டியைக் கூட வாங்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

அது மாத்திரமன்றி தச்சு தொழிலானது எமது பாரம்பரிய தொழிலாகும். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் எமது  பாரம்பரியமான தொழிலை இழக்க நேரிடும். இது சிறந்ததொரு யோசனை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...