மும்பை விமான நிலையத்தில் ஆண் ஒருவர் தற்கொலை!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது ஆண் ஒருவர், மும்பை விமான நிலையத்தின் ஆறாம் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
“எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதியிருந்த கடிதம் ஒன்றை அவர் பையில் காவல்துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த ஆண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரின் குடும்பத்தார் கூறியதாகக் காவல்துறை தெரிவித்தது.
இரு நாள்களுக்கு முன் குறிப்பிட்ட நபர் வீட்டை விட்டுச் சென்றதாகக் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்வதற்கு முன் தம் குடும்பத்தாரை அழைத்து, விமான நிலையத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவர்களைச் சந்தித்த பின் மாடியிலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணை தொடர்கிறது.