முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஆயிரக் கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் கொண்டாட்டம்
இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றதனை, ஆயிரக்கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் குழப்பம் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
மன்செஸ்டர் சிட்டிக்கு எதிராக செல்சியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு பிறகு சம்பியன் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு லிவர்பூல் அணிக்கு கிடைத்தது.
இந்த போட்டியினை, கோல் காப்பாளர் அலிசன், தடுப்பாளர் விர்ஜில் வான் டிஜ்க் மற்றும் களத்தடுப்பாளர் அலெக்ஸ் அக்ஸ்லேட் சேம்பர்லெய்ன் உட்பட பல வீரர்கள் செல்சியா- சிட்டி விளையாட்டைப் பார்த்து ஒன்றாக கொண்டாடினர்.
இந்தபோட்டியின் முடிவின் அரை மணி நேரத்திற்குள் சுமார் 2,000 ரசிகர்கள் கழக மைதானமான என்ஃபீல்ட் (Anfield) மைதானத்திற்கு வெளியே கூடியிருந்து, தங்களது கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். சிலர் பிரபலமான கோப் ஸ்டாண்டிற்கு (Kop stand) வெளியே கொண்டாடினர்.
இதன்போது, என்ஃபீல்ட்டைச் சுற்றியுள்ள வீதிகளை மெர்செசைட் பொலிஸார் மூடியதுடன், வாகன சாரதிகளுக்கு இப்பகுதியைத் தவிர்க்க அறிவுறுத்தினர்.
எனினும், மைதானத்தில் பொலிஸ் அதிகாரிகளால் கூட்டத்தை கலைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.