மின்-ஸ்கூட்டர்களை நடைபாதையில் பயன்படுத்தத் தடை!
மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த ஜெர்மனி தடைவிதித்துள்ளது.
இனி அவற்றைச் சாலைகளிலும் சைக்கிள்பாதைகளிலும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பாவில் மின்-ஸ்கூட்டர் மீதான மோகம் அதிகரித்துவரும் வேளையில், பாதசாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த முடியும்.
மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் குறைந்தது 14 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை அவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
பகிரவும்...