மாளிகாவத்தையில் 58 வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!
மாளிகாவத்தை பிரதேசத்தில் கிணற்றொன்றில் இருந்து சீன வாள்கள் உள்ளிட்ட 58 வாள்கள் மற்றும் மேலும் சில கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவற்துறை சுழியோடிகளை பயன்படுத்தி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையில் 46 சீன வாள்கள் உள்ளிட்ட 56 வாள்களும் , கத்திகள் 53ம் , வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கியொன்றும் , ஐஸ் ரக போதைப்பொருள் பெக்கெட் ஒன்றும் மற்றும் 25 இறுவட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.