மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.