மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு பெறாமல் காணப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.
எனவே, குறித்த அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கி, அவற்றை நிறைவு பெறச்செய்ய வேண்டும் என்பதில் கூட்டமைப்பு அக்கறை காட்டி வருதாக கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி உரிய தீர்வை பெறுவதற்கு கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே நாடாளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகியதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதற்குரிய நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பகிரவும்...