மலையகத்திலும் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு
பதவி உயர்வு மற்றும் சில கோரிக்கைகளை முனவைத்து மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்ற தாதியர்களும், தோட்டபுறங்களில் இயங்குகின்ற வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை, நுவரெலியா, லிந்துலை, மஸ்கெலியா ஆகிய ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தந்த நோயாளர்கள் பலர் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.