மனிதனின் வாய் போன்ற வடிவத்தில் பணப்பை – ஜப்பான் கலைஞர் அசத்தல்
ஜப்பானை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் ஒருவர் மனிதனின் வாய் போல தோற்றமளிக்கும் பணப்பை (மணி பர்ஸ்) ஒன்றை உருவாக்கி உள்ளார்.
ஜப்பானை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் டிஜே. இவர், மனிதனின் வாய் போல தோற்றமளிக்கும் பணப்பை (மணி பர்ஸ்) ஒன்றை உருவாக்கி உள்ளார். தனது 2 மாத உழைப்பிற்கு பின்னர் உருவாக்கிய இந்த பணப்பையை, வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுவரை 1 கோடியே 38 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். தாடி, மீசை, இளஞ்சிவப்பான உதடு மற்றும் பற்கள், ஈறுகள் போன்றவற்றுடன் நிஜமான மனித வாய் போலவே மிகவும் தத்ரூபமாக இந்த பணப்பை காட்சியளிக்கிறது.
இந்த பணப்பை விற்பனைக்கு அல்ல என தெரிவித்துள்ள டிஜே, எந்த மாதிரியான பொருட்களை கொண்டு இதனை உருவாக்கினார் என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.