மட்டக்களப்பில் சஹ்ரான் குழுவின் நான்கு மாடி பயிற்சி முகாம் அடையாளம் காணப்பட்டது!
மட்டக்களப்பு தாழங்குடாவில் சஹ்ரான் குழுவின் பெரிய பயிற்சி முகாம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் நேற்று கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பயிற்சி முகாம் சிக்கியது.
தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் குடியிருப்புக்கள் குறைந்த பகுதியொன்றில் இந்த பயிற்சி முகாம் அமைந்திருந்தது. தமிழர்களின் பாரம்பரிய நிலமான அங்கு, சில காலத்தின் முன் காணிகளை வாங்கி இஸ்லாமியர்கள் குடியிருந்தனர்.
சனத்தொகை குறைந்த அந்த பகுதியில், ஆங்காங்கே வீடுகள் அமைந்திருந்தன. வீடுகள் தகரங்களால் உயரமாக மறைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. அங்கு நான்கு மாடி வீடொன்றே பயிற்சிமுகாமாக இருந்துள்ளது. அந்த மாடிகள் சூட்சுமமாக அமைக்கப்பட்டுள்ளன, மேலே செல்லும் பாதைகள் ஒடுக்கமாக அமைக்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் தமிழ்பக்க செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி, சஹ்ரானின் தம்பி ரில்வானே அங்கு தங்கியிருந்துள்ளார்.
ஆட்கள் வருவதை தொலைவிருந்து கவனிக்கவே, பாதுகாப்பு அரணும் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு யாரும் தங்கியிருக்கவில்லை.