மஞ்சள் மேலங்கி – கைது செய்யப்பட்ட போராளிகளில் 40% வீதமானவர்கள் சிறையில்..
மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 40 வீதமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதுவரை 2,000 வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1,755 பேரின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 40% வீதமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நவம்பர் 17 ஆம் திகதியில் இருந்து கடந்த 21 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் வரையான காலப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டவர்களாகும். மொத்தமாக 9,219 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரதானமானவர்கள் 20 இல் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெண்கள் 5% வீதத்தினர் என்பதும், 400 பேர் தேடப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.