மக்களின் பாதுகாப்பிற்காக, கிழக்கில் புதிய முகாம்கள்

மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு மாகாணத்தில் புதிய முகாம்களை அமைக்கவுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். த்துடன், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்பில் நம்பிக்கை வைத்து செயற்படுமாறு கோரியுள்ள இராணுவத் தளபதி நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர் உயர்ந்த பட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாளாந்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பிலும் பாதுகாப்புப் பிரிவினர் உயர்ந்த பட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இலங்கையில் சுமார் 200 பயங்கரவாதிகள் மாத்திரமே இருப்பதாகத் தெரிவித்த இராணுவத் தளபதி, அவர்களில் 90 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் தொடர்ந்தும் பாரிய அளவிலான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
பகிரவும்...