Main Menu

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கப் பரிந்துரைத்துள்ளது.
எனினும், குறித்த ஒப்பந்தம் அரசாங்க அமைச்சரவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மூன்று கட்டமாக நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமானது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரவுள்ளதுடன், அது ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், காசாவில் உள்ள பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பகிரவும்...
0Shares