பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: 5வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும் சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும் நபர்கள் கொண்ட கும்பல்.
இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றினார்.பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மணிவண்ணன் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 5வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். மணிவண்ணனை கைது செய்து வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சிபிசிஐடி காவல்துறை.