Main Menu

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூல்

அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூலித்ததாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், 2ஆவது நாள் வசூல், 70 கோடி ரூபாயை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று 3ஆம் நாளான நேற்று உலகம் முழுவதும் 75கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, கடந்த 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் கடந்த 30 ஆம் திகதி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares