போலியான செய்திகளை நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவிப்பு
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அனைத்து செய்திகளும், முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம் அல்லது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் மட்டும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு – இந்தியா வலியுறுத்து முந்தைய செய்திகள்