பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்!
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் அது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு அவதானம் செலுத்தியுள்ளது.
அண்மையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தின்போது, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கருத்து மற்றும் காணொளிகளை பதிவிடுதல் மற்றும் சமூக வலைத்தளம் ஊடாக வெறுப்புணர்வை பரப்புதல் முதலான செயற்பாடுகளின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.