புதிய கட்சி ஒன்றை உருவாக்கியது ஏன் – மஹிந்த விளக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்கால்லை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் வரிச் சுமையை மக்கள் மீது அதிகமாக சுமத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு உரையாற்றும் போது சுட்டிக்காட்டினார்.